வியாழன், 5 மே, 2016

என் அம்மாவை துலைத்துவிட்டேன்

என் அம்மாவை துலைத்துவிட்டேன்

என்னுடைய அம்மாவை மூன்று வருடங்களுக்கு முன் துலைத்து விட்டேன்,
"துலைத்து விட்டேன்", என்ற வார்த்தைகள் இங்கு நன்றாக பொருந்துகிறது ,

ஏனென்றால்,

நான் துலைத்த ஒரு சோடி மூக்கு கண்ணாடி திரும்ப கிடைத்து போல்,
நான் துலைத்த திறப்பு கோர்வை திரும்ப கிடைத்து போல்,

என் அம்மாவும் கிடைப்பா என தேடி அலைகிறேன்,

எங்கு தேடியும்,  இன்னும்  என் அம்மா கிடைக்கவில்லை 
என் அம்மாவை யாராவது கண்டு எடுத்திருந்தால்,
தயவு செய்தது திருப்பி தாருங்கள்,

என்னுடைய அம்மா எனக்கு வேண்டுமே,
இந்த அறுவது வயது குழந்தைக்கு அதன் அம்மா வேண்டுமே,

அழுகையுடன் 

அம்மாவின் அன்பு மகன்

கருத்துகள் இல்லை: